ஈரோடு சூன் 11: தமிழகத்தில் கொரானா நோய் பரவலில் பரவலாக குறைந்தாலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாகவே காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்நிலையில் தமிழக அரசு வரும் 21ம் தேதி வரை 27 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ளது. ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு நீட்டிப்பு செய்துள்ளது. எனவே, பொதுமக்கள், வணிகர்கள் சுயகட்டுப்பாடுடன் இருந்து நோய் பரவலை குறைக்க ஒத்துழைப்போம்.நேற்று வரை ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகள் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை என உள்ளது. மீண்டும் வரும் 21ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் இரா.க.சண்முகவேல் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே