ஈரோடு சூன் 19: ஈரோடு மாவட்ட போலீசார் பணி நிமித்தமாக செல்லும்போது கட்டாயமாக ெஹல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.அனைத்து மாவட்ட போலீசார் பணி நிமித்தமாக வெளியே டூவீலர்களில் செல்லும்போது கட்டாயமாக ெஹல்மெட் அணிய வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவிட்டிருந்தார். இதன்படி சில மாதமாக ெஹல்மெட் அணிந்து போலீசார் சென்றனர். அதன்பின் அணிவதை தவிர்த்தனர்.இந்நிலையில் ஈரோடு எஸ்.பி., சசிமோகன் நேற்று முன்தினம் இரவு, ‘அனைத்து போலீசாரும் கட்டாயமாக ெஹல்மெட் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும். பணி நிமித்தமாக டூவீலர்களில் செல்லும்போது ெஹல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. இதை ஒவ்வொரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் கண்காணிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே