பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரானா வார்டுகளை, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
3.5 கோடி தடுப்பூசி டெண்டர்; ஜூன் 5ல் திறப்புமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்பெருந்துறை மே 29: பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட புதிய கொரானா வார்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்ட வளாகம், படுக்கை வசதிகளை மே 30ம் தேதி காலை 10 மணிக்கு ஆய்வு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம்.தமிழகத்துக்கு கொரானா தடுப்பூசி, 95 லட்சம் டோஸ் வந்தது. 82 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு, ஆறு லட்சம் தடுப்பூசி உள்ளது. 18 முதல், 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு, 85 கோடி ரூபாய் செலுத்தி 13.85 லட்சம் தடுப்பூசி பெற்றுள்ளது. இன்னும், 12 லட்சம் தடுப்பூசி வர உள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக 3.5 கோடி தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தம் கேட்டுள்ளோம். ஜூன் 5ம் தேதி ஒப்பந்தம் திறந்து முடிவு செய்யப்படும். இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசியை, அடுத்த ஆறு மாத காலத்துக்குள் கொள்முதல் செய்வோம். மத்திய அரசிடம் இருந்தும் தடுப்பூசி கேட்டுள்ளோம்.இவ்வாறு கூறினார்.சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் கதிரவன் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே