ஈரோடு ஜூன் 10: ஈரோடு ஜானகி அம்மாள் லேஅவுட்டில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியதை திரும்ப பெற வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலைவாசி உயர்கிறது. சாதாரண மக்கள் பாதிக்கின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்து எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.எஸ்.டி.டி.யு., தொழிற்சங்க மாநில பொருளாளர் ஹசன்பாபு, மாவட்ட பொதுச் செயலாளர் முஹசின் காமினுான், பாஷா, முகம்மது அகில் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே