ஈரோடு ஜூன் 8: பீடி தொழிலாளர்கள் வேலை இழந்து, வருவாய் இழந்துள்ளதால் அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக பீடி கம்பெனிகளை திறக்க வேண்டும்.தமிழ்நாடு பீடி, சுருட்டு, புகையிலை தொழிலாளர் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி.,) பொதுச் செயலாளர் காசிவிஸ்வநாதன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியது,கொரானாவுக்கான ஊரடங்கு தளர்வால் குறிப்பிட்ட வகை ஆலைகள் மட்டும் இயங்க அரசு அனுமதி வழங்கி உளளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை தரும் பீடி கம்பெனி, அதனை சார்ந்த மூலப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து சமூக இடைவெளியுடன் வேலை வழங்க வேண்டும்.இத்தொழில் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்லும் வாகன போக்குவரத்துக்கு தடை கூடாது. தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் பீடி கம்பெனிகளை தொடர்ந்து இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே