ஈரோடு ஆக 6:

அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரியம்மன் கோயில்களில் இன்று 6ம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வருகின்றது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, புதியதாக பொறுப்பேற்ற பிறகு தலைமைச்செயலகம், சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்பட முக்கிய அரசு கட்டிடங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் கூடிய பெயர் பலகையை மீண்டும் வைத்துள்ளது.

இந்நிலையில், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தொடங்கி உள்ளது. தமிழில் அர்ச்சனை செய்வது என்பது கோயில்களில் நடைமுறையில் உள்ள போதிலும் அதை மேலும் செம்மைபடுத்தும் வகையில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தின் கீழ், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் விபரங்களுடன் கோயிலில் பெயர் பலகை வைக்கப்பட்டு பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தமிழில் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று 6ம் தேதி முதல் இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 47 முக்கிய கோயில்களில் தொடங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை எனும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today