பவானிசாகர் சூன் 21: பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் கடந்த ஆறு நாளில் நான்கு அடி உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை, கோவை, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து சீராக உள்ளது. கடந்த 15ம் தேதி 88.81 அடியாக இருந்து, 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரத்து இருப்பதால், 16ம் தேதி 89.21 அடியானது. 17 ம் தேதி 90.27 அடியாகவும், 18 ம் தேதி 91.43 அடியாகவும், 19ம் தேதி 92.20 அடியாகவும், 21ம் தேதி 92.91 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 556 கனஅடி நீர் வரத்தானது. அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆறு நாட்களில் நான்கு அடி நீர் உயர்ந்துள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே