ஈரோடு சூன் 20: அஞ்சூர், கொடுமுடி, சிவகிரி உட்பட பல இடங்களில் மின்தடை அஞ்சூர், கொடுமுடி, சிவகிரி உட்பட பல பகுதிகளில் வரும், 21, 22ம் தேதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.அஞ்சூர் துணை மின் நிலையயத்தில் 21ம் தேதி பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.இதனால் நடுப்பாளையம், கருவேலம்பாளையம், பில்லாபாளையம், நகப்பாளையம், குப்பக்கவுண்டன்வலசு, ஊடையம்பாளையம் பகுதியில் மின்சாரம் இருக்காது. கொடுமுடி துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும். சேனிடோரியம் துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூர், பெரியார் நகர், பசுமை நகர், கே.எம்.சி.மருத்துவமனை, வி.ஆர்.எல்.நகர், செட்டிதோப்பு, தாய் நகர், திருவேங்கடம்பாளையம், பவானி சாலை, காடபாளையம், திருவேங்கடம்பாளையம் புதூர் பகுதியில் மின்சாரம் இருக்காது. அஞ்சூர் துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால், ஜெ.ஜெ.நகர், காரவலசு, பொரசம்பாளையம், சொரியம்பாளையம், தாதராக்காடு, பூலாவலசு, வள்ளியம்பாளையம், முத்துகவுண்டன்பாளையம், சின்னதாண்டாம்பாளையம் பகுதியில் மின்சாரம் இருக்காது. வள்ளிபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால், முத்தையன்வலசு, காரக்காட்டுவலசு, சுள்ளிபாளையம், பெரும்பரப்பு, தட்டாம்பாளையம், கோட்டைகாட்டுவலசு, கொந்தளம்புதூர், மாரியம்மன் கோவில் புதூர் பகுதியில் மின்சாரம் இருக்காது. சிவகிரி துணை மின் நிலையத்தில் வரும், 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் சின்னியம்பாளையம் காலனி, சிலோன் காலனி, எல்லப்பாளையம், குமாரவலசு, காகம் பகுதியில் மின்சாரம் இருக்காது. மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால், வேலப்பம்பாளையம், ஸ்ரீராம் நகர், அத்தப்பம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பவளத்தாம்பாளையம், தெற்குபள்ளம், லட்சுமி கார்டன், லட்சுமி நகர், டைமன் நகர், பழனிகவுண்டன்பாளையம், டாக்டர் நகர், கார்கில் நகர், முருகன் நகர், வி.ஐ.பி., நகர், சரவணா நகர், வித்தியா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே