ஈரோடு மே 30: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு, 25 ஆயிரம் ரூபாயை, ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் வழங்கினர்.ஈரோடு காலிங்கராயன் அரசின் விருந்தினர் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, ஈரோடு மாவட்ட  பத்திரிகையாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள், பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தமைக்கு நன்றி, முதல்வர் நிவாரண  நிதிக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினர்.மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும். தாலுகா நிருபர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பத்திரிகையாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில், 50 சதவீத கட்டண சலுகை ஆந்திரா மாநிலத்தில் வழங்குவதை போல் வழங்க வேண்டும். கொரானாவால் மறைந்த கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை செய்தியாளர் சந்திரசேகர் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.சங்க செயலாளர் ஜீவாதங்கவேல், துணை தலைவர் மூர்த்தி, பொருளாளர் ரவிச்சந்திரன், மகேந்திரன், பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே