ஈரோடு ஜூன் 10: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்க தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். சக்தி மசாலா நிறுவனம் சார்பில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் பொன்னி அரிசி மற்றும் மசாலா பொருட்களை கொடுத்தனர்.பருப்பு, புளி, கோதுமை என 19 வகையான உணவு பொருட்கள் கொண்ட தொகுப்பு தயார் செய்யப்பட்டது.ஈரோடு எஸ்.பி., டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ்., நிவாரண பொருட்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி பேசுகையில்,தவறுகளை சுட்டிக் காட்டவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, நல்லது நடப்பவைகளை பத்திரிகைகள் ஊக்குவிக்க வேண்டும். தற்போது உள்ள நெருக்கடி கால கட்டத்தில் சக பத்திரியைாளர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனான சிறப்பான செயலை பாராட்டுகிறேன், என்றார்.பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.நிர்வாகிகள் சுப்பிரமணியம், மூர்த்தி, ராஜா, நவீன், தி.க.சண்முகம், பழனிசாமி, மகேந்திரன், விஜய் சாய், பார்த்திபன், பாஸ்கரன், ஜான்சன், வேலுச்சாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்.
ஈரோடு டுடே