சென்னிமலை மே 30: சென்னிமலை அருகே பஞ்சு ஆலைக்கான குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் கழிவு பஞ்சு எரிந்தன.சென்னிமலையில் அரச்சலுார் சாலை, தண்ணீர்பந்தல்பாளையத்தில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை செயல்படுகிறது. அறவை செய்வதற்கான கழிவு பஞ்சை குடோனில் இருப்பு வைத்திருந்தனர். கொரோனாவுக்கான ஊரடங்கால் பஞ்சு ஆலை தற்போது செயல்படவில்லை.நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மின் கசிவால் கழிவு பஞ்சு இருந்த குடோனில் இருந்து புகை வந்தது. மதியத்துக்கு மேல் அங்கு தீப்பற்றி அனைத்து கழிவு பஞ்சும் எரிந்து சேதமடைந்தது. சென்னிமலை, பெருந்துறையில் உள்ள தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், பல மணி நேரம் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
நிருபர்.
ஈரோடு டுடே