‘பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்’பசி தீர்க்கும் பவானி இளைஞர்கள்
பவானி ஜூன் 2: -‘பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்’ என்ற அடிப்படையில் பவானியில் பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில் 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனை எதிரில் இன்று மதியம் பவானி பொது நல அமைப்பு இளைஞர்கள் சார்பில் பவானி ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஏற்பாட்டின்படி ‘பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்’ நிகழ்ச்சி நடந்தது.ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சண்முகம் நிகழ்ச்சியை துவக்கினார். இதுகுறித்து அமைப்பினர் கூறுகையில், கொரானா காலத்தில் உணவின் தேவை அறிந்து ஏழைகள் பயன் பெறும் வகையில் 300 பேருக்கு இங்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. உணவை யாரும் வீணாக்க வேண்டாம். தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.ஆண்டிக்குளம் பஞ்சாயத்து தலைவர் பத்மா விசுவநாதன், மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே