திருந்திய நெல் சாகுபடி; இணைய வழி பயிற்சிக்கு அழைப்புஈரோடு மே 31: ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து ஜூன் 2ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இணைய வழி பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.புதுவள்ளியம்பாளையம் மைரடா, வேளாண் விஞ்ஞானி சரவணன் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை விளக்கி, விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். ஜூம் மீட்டிங் இணைப்பை, 6689229190, பார்வேர்டு: 2HMfYF மூலம் பெற்று பயன் பெறலாம்.
நிருபர்.
ஈரோடு டுடே