சத்தியமங்கலம் சூன் 20: நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து சரிந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா, நீலகிரி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து 10 ஆயிரம் கனஅடியை விட அதிகமானது. கடந்த நான்கு நாட்களில் நீர் வரத்து அதிகமானதால், மூன்று அடி அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. நேற்று முன்தினம் முதல் மழை குறைந்ததால் 10 ஆயிரத்து 178 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 6 ஆயிரத்து 573 என்றும், மதியம் 6 ஆயிரத்து 533 என்றும் குறைந்தது. இன்று மதியம் 12 மணிக்கு அணையில் நீர் இருப்பு 92.51 அடியாகும். அணைக்கான நீர் வரத்து 2 ஆயிரத்து 667 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 1,000 கனஅடியாகவும் உள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே