நவம்பர் முதல் வாரத்தில் கல்லூரிகள் திறப்பு

கொரோனா தொற்றால் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன, இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் எனப்படும் இணைய வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன.

நவம்பர் முதல் வாரத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, மாணவர்கள் வீட்டிலே முடங்கி மன அழுத்தத்தில் தவித்த மாணவர்களுக்கு இது உண்மையில் மிகப் பெரிய உற்சாகத்தை தரும், ஆனால் மாணவர்கள் சுய பாதுகாப்பில் கவனத்துடன் செயல்பட்டால் ஒழிய கொரோனா தடுப்பு எளிதாகாது.