ஈரோடு சூன் 09: ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் பகுதியில் கொரானா தொற்று உள்ள பகுதியிலும், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.நோய் தொற்று உள்ள வடமுகம் வெள்ளோடு, தொட்டம்பாளையம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களிடம் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.தொற்று கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அம்மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், மருந்து போன்றவை கிடைக்க, உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு ‘வார் ரூம்’ல் உள்ள 80569 31110, 87547 31110, 82206 71110 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, தீர்வு பெறலாம்.தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்லக்கூடாது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவும் என்பதால், கட்டுப்பாட்டு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். இதை மீறி சுற்றுபவர்கள் குறித்து, 0424 1077, 0424 2260211 போன்ற எண்களில் தெரிவிக்கலாம், என கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார்.

நிருபர்.
ஈரோடு டுடே