பெருந்துறை ஜூன் 3: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் கொரோனா நிவாரணப்பணிக்காக மூன்று லட்சம் ரூபாய் திரட்டினர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடுதல் படுக்கைகளுடன் கூடிய கட்டடம் கட்டும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அங்கு சென்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி, 2.50 லட்சம் ரூபாயை அம்மருத்துவமனையின் ஆக்சிஜன் இணைப்புக்கான பைப்லைன் அமைக்கும் பணிக்கும், 50,000 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கினார்.கல்லுாரி முதல்வர் டாக்டர் மணி, கூட்டணி மாவட்ட பொருளாளர் தங்கராஜ், பெருந்துறை வட்டார செயலாளர் மலையப்பசாமி, மொடக்குறிச்சி வட்டார செயலாளர் வரதராஜன், ஈரோடு வட்டார செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே