ஈரோடு சூன் 13: தேசிய அளவில் சாதனைகள் புரிந்ததற்காகவும், வீரதீர செயல் புரிந்ததற்காகவும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.இந்திய அரசு ஆண்டு தோறும் நாட்டுக்கு பெருமை தேடி தரும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதில் துரோணாச்சாரியார் விருது, ராஷ்ட்டிரிய கேல் புரட்சகான் புரஸ்கார் விருது, அர்ஜூனா விருது, தயான் சந்த் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என 5 விருதுகள் வழங்கப்பட உள்ளன.இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட பிரிவுக்கு வருகிற 16-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இந்த தகவலை ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ஆர்.சதீஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே