கோபிசெட்டிபாளையம் மே 31:கோபிசெட்டிபாளையம் அருகில் பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரானா ஊரடங்கையொட்டி அரிசி மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் சத்தியபாமா வேலுமணி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ.,வுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 16 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, ஆவி பிடிக்கும் கருவி, மாத்திரைகளை வழங்கினார்.இதைத்தொடர்ந்து வெள்ளாளப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார். இதை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். மேலும் சுகாதார நிலையத்தில் உள்ள உள்நோயாளிகள் படுக்கை வசதிகளையும் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பார்வையிட்டர்.இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் ஒன்றியக்குழு தலைவர் மவுதீஸ்வரன், ஊராட்சி செயலளர் நாகமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே