ஈரோடு மே 29: ஈரோட்டில் தி.மு.க., சார்பில் 10 ஆயிரம் முன்கள பணியாளர்களான துாய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் அத்யாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 300 ஆக்சிஜன் படுக்கை பயன்பாட்டுக்கு வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு, ஈரோடு வந்தார்.ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்.பி., தங்கதுரை, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். ஈரோடு காலிங்கராயன் விடுதியில், தி.மு.க., சார்பில் 10 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு முதல்வர் வழங்கினார்.வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே