ஈரோடு ஜூன் 1: இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கிசான் விகாஸ் யோஜனா பயிற்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, சுகாதாரத்துறையில் கொரானா தொடர்பான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உள்ளனர்.எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன், ஜெனரல் டூட்டி அசிஸ்டன்ட், ஜி.டி.ஏ., அட்வான்ஸ்டு – கிரிட்டிக்கல் கேர், ேஹாம் ெஹல்த் எய்டு, மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டண்ட், பிளிபோடோமிஸ்ட் தொடர்பாக முற்றிலும் இலவசமாக குறுகிய கால பயிற்சி வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி, மூன்று முதல் ஐந்தாண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள், டிப்ளமோ இன் டெக்னிக்கல் சப்ஜெக்ட், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புடைய படிப்பு முடித்தவர்கள் பயிற்சி பெறலாம்.விருப்பம் உள்ளோர், தங்கள் பெயர், கல்வி தகுதி, முகவரி, தொலைபேசி எண், இ–மெயில் முகவரியை, https://tinyurl.com/ekavkz27 இணைய தள இணைப்பில் பதிய வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 94424 94266, 94430 72649, 94433 84133, 94990 55702 எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம், என ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே