ஈரோடு ஜூன் 5: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் வரும் 14ம் தேதி வரை முழு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுகிறது.ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு,தமிழக அரசின் அறிவுறுத்தல்படி தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, பழம், இறைச்சி, மீன்கள், பூ விற்பனை கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 50 டோக்கன் வழங்கி பத்திர பதிவு நடக்கும்.ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணை வைத்திருந்தால், ஏற்றுமதி பணிக்கும், மாதிரிகள் அனுப்புவதற்கும் பத்து சதவீத பணியாளர்களுடன் இயக்கலாம்.நடமாடும் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும். நடந்து சென்று மளிகை, காய்கள் வாங்கலாம். வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. ஈரோட்டில் வார் ரூம் 24 மணி நேரமும் செயல்படும். இம்மையத்தை 8056931110, 8220671110, 8220791110, 8754231110, 8754381110, 8754731110, 8870361110, 8870541110, 8870581110, 8870691110 என்ற பத்து எண்களில் தொடர்பு கொள்ளலாம். மக்களுக்கு தேவையான சந்தேகங்களுக்கு, வார் ரூம் எண்கள், அவசர கட்டுப்பாட்டு மைய எண்: 0424 1077, 0424 2260211, 97917 88852 மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிருபர்.
ஈரோடு டுடே