ஈரோடு ஜூன் 7: கொரானாவுக்கான ஊரடங்கு இன்று முதல் தளர்வுக்கு வந்ததால், ஈரோட்டில் மளிகை கடை, காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வந்தன.தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்தாலும் கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையவில்லை. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் தளர்வு அறிவிக்கப்பட்டு மொத்த, சில்லறை மளிகை கடைகள், காய்கறி கடைகள், நடமாடும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம், என அரசு அறிவித்துள்ளது.இதன்படி காலை 6 மணி முதல் மளிகை, காய்கறி கடைகள் முழுமையாக திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. கிராம பகுதியில் உள்ள கடைக்காரர்கள், வீட்டு தேவைக்காக பொதுமக்களும் கடைகளில் குவிந்தனர்.சமூக இடைவெளி, முககவசம் போன்றவை கட்டாயமாக உள்ளதால், தங்கள் பை, எண்ணெய் கேன் போன்றவைகளை வரிசையில் வைத்து நிழலில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.அதேநேரம் அரசு அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுடன் அரசு அலுவலர்களும் அதிக எண்ணிக்கையில் குவியத்துவங்கினர். இதனால் அனைத்து சிக்னல்களிலும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. அனைத்து சாலைகளிலும் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
நிருபர்.
ஈரோடு டுடே