தயக்கமின்றி மக்கள் அழையுங்கள்; புதிய எஸ்.பி.,ஈரோடு ஜூன் 7: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தங்கதுரை மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ்., அதிகாரி வி.சசிமோகன் நியமிக்கப்பட்டார். இவர், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.ஈரோட்டில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சசிமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணியை முதன்மை பணியாக கொண்டு செயல்படுவோம். பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இது குறித்து புகார் தெரிவிக்க என்னுடைய வாட்ஸ்அப் எண்ணான 9488010684 ல் புகார் தெரிவிக்கலாம்.புகாரில் உண்மை தன்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தயக்கமின்றி புகார்களை அளிக்கலாம். பொது மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் காவலர்கள் செயல்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்.
ஈரோடு டுடே