ஈரோடு சூன் 22: ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் இன்று ஈரோடு கால்நடை மருத்துவமனை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தலைவர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார். கொள்கை பரப்புச் செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் தேசிங்கு, மாநகர துணை செயலாளர் கவுதம், மாநகரச் செயலாளர் ருத்ரன், பகுதி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், என வலியுறுத்தினர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே