பெருந்துறை, ஜூன் 2: பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடப்பட்டது. இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனை முற்றிலும் கொரானா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. பிற நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை வழங்கப்படுவதில்லை.இங்கு கொரானா நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள் என பலரும் வருவதால், தடுப்பூசி போட வருபவர்களுக்கு கொரானா பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது.எனவே 3ம் தேதி முதல் அங்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக, பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுகிறது.

நிருபர்.
ஈரோடு டுடே