ஈரோடு சூன் 17: ஈரோடு பகுதியில் அதிகமாக கொரோனா பரவுவதுடன், இறப்பும் அதிகமாக உள்ளது. அதேநேரம் தடுப்பூசி போட மக்கள் ஆர்வமாக வரும் நிலையில் குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மாவட்ட அளவில் இதுவரை 2.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 400 தடுப்பூசி மருந்து வந்தது. நேற்று முன்தினம் கிராமப்பகுதியிலும், நேற்று மாநகராட்சி பகுதியிலும் தடுப்பூசி போடப்பட்டது.ஈரோடு மாநகரில் நேற்று 10 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. அனைத்து இடங்களிலும் 300 பேருக்கு தடுப்பூசி காலை 8 மணிக்கு டோக்கன் வழங்கி போடப்படும் என அறிவித்தனர். ஆனால் இரவு 3 மணிக்கே மரப்பாலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருநகர் காலனி, பழைய பாளையம், குமலன்குட்டை போன்ற பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் குவியத்துவங்கினர்.அப்போதே வரிசையில் நின்று 5.30 மணிக்கு தடுப்பூசி போட வந்த சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் டோக்கன் வழங்கினர். 500 பேருக்கு மேல் மக்கள் நின்ற நிலையில் 300 பேருக்கு டோக்கன் வழங்கி காலை 9 மணிக்கு தடுப்பூசி போட்டு முடித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே