ஈரோடு 20: ஊரடங்கு நிலவுவதால் ஈரோடு, நாமக்கல், மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து, குறைந்து காணப்படுகிறது. ஆந்திராவில் இருந்து ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு வரத்தாகிறது. கடந்த இரண்டு மாதமாக தக்காளி சீசன் நிலவுவதால் 14 கிலோ எடை உள்ள பெட்டி 50 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றும், இன்றும் ஒரு பெட்டி 180 ரூபாய் என 120 ரூபாய் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு பெட்டிக்கு 100 முதல் 120 ரூபாய் வரை விலை உயர்ந்ததால், சில்லரை விலையில் ஒரு கிலோ 16 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் நேரத்தில் ஈரோடு மார்க்கெட்டுக்கு 10 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி வரத்தாகி, பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். தற்போது 4 ஆயிரம் பெட்டிகளுக்கும் குறைவாகவே வரத்தாவதால் விலை உயர்கிறது. அதேநேரம் ஒரு பெட்டி தக்காளி சென்னையில் 300 ரூபாய், திருச்சி, கோவையில் 250 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே