ஈரோடு ஜூன் 8: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 51.59 கோடி ரூபாயில் கட்டப்படும் கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கான கட்டுமான பணிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்படும் ஜவுளி சந்தை பற்றி விளக்கப்பட்டது.பின்னர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் கொரானா தடுப்பு பணி, பாதுகாப்பு ஏற்பாடுகள், காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்ட உணவு பொருள் மக்களுக்கு கிடைப்பது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விரைவாக கட்டுமான பணிகளை முடித்து, கூடுதல் படுக்கை வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர யோசனை தெரிவிக்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்ட கொரானா சிகிச்சை மையங்களை, தேவைக்கு ஏற்ப குறைத்து கொண்டு, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க உறுதி செய்ய வேண்டும், என அமைச்சர் நேரு கேட்டுக் கொண்டார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ஐ.ஏ.எஸ்., சிறப்பு அதிகாரிகள் செல்வராஜ், நிர்மல்ராஜ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், எம்.பி,கள் கணேசமூர்த்தி, சுப்பராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜவுளி சந்தை கட்டுமான பணி; அமைச்சர் நேரு ஆய்வு
நிருபர்.
ஈரோடு டுடே