கொடுமுடி சூன் 24: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 29 ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடக்கிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ.,க்கள் நிலை அதிகாரிகள், வருவாய் கணக்குகள், நில அளவீட்டு கருவிகள் சரி பார்த்தல், கணக்குகள் பராமரிப்பு, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வு போன்றவற்றை ஆய்வு செய்து, அந்த ஆண்டுக்கான தணிக்கையை நிறைவு செய்வார்கள். இதன்படி கொடுமுடி தாலுகாவில் கலெக்டர் ெஹச்.கிருஷ்ணனுண்ணி நேற்று கிராம்பாடி உள்ளிட்ட கிராமங்களின் வருவாய் கணக்கை நேர் செய்தார். பின், இணைய தளம் மூலம் பெறப்பட்ட வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பரப்பளவு திருத்தம் வேண்டுதல், சிறு, குறு விவசாயிகள், நில அளவை, விதவை சான்று பெறுதல் போன்ற கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்க பரிந்துரைத்தார். கடந்த ஓராண்டில் அந்த தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு பிரிவிலும் கணக்குகள் பராமரிக்கப்பட்ட விபரங்கள், ஆவணங்கள், பதிவேடுகள், ரசீது விபரங்கள் போன்றவைகள் தணிக்கை செய்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் – பொது – பாலாஜி, கொடுமுடி தாசில்தார் எஸ்.ஆசியா, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே