பெருந்துறை சூன் 23: ஈரோடு மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் சம்மந்தமான விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 35 உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரியில், ஈரோடு மாவட்ட எஸ்.பி., வி.சசிமோகன் துவக்கி வைத்து பேசினார். விரிவுரையாளர் ஜீவானந்தம், பேராசிரியர் நடேசன், பிரியாகாந்த் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்களில் கையாளப்படும் புதிய நுட்பங்கள், சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கினர். சமீப காலமாக சைபர் கிரைம் வழக்குகளில் சிக்கலான பிரச்னைகளை தெரிவித்து, அதனை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே