சென்னிமலை மே 28: சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில், கொரானா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.அங்கு 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 1,120 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதுபோல, வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், 1,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.சென்னிமலையில் நடந்த முகாமை, சேர்மன் காயத்ரி இளங்கோ துவக்கி வைத்தார். வெள்ளோட்டில் நடந்த முகாமுக்கு, குமாரவலசு பஞ்சாயத்து தலைவர் திரு.இளங்கோ தலைமை வகிக்க, தி.மு.க., செயலாளர் திரு.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

நிருபர்.
ஈரோடு டுடே