பவானி மே 31: பவானி அருகே தொட்டிபாளையம் பகுதியில் தர்பூசணி செடி அதிகமாக பயிரிட்டுள்ளனர். இதில் சுரேஷ் என்பவர் இரண்டு ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டார்.இச்செடிகளை வளர்க்க, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அறுவடைக்கு தயாராக தர்பூசணி உள்ள நிலையில், முழு ஊரடங்கு அமலானதால் அவற்றை பறித்து வெளியூருக்கு அனுப்ப முடியவில்லை. சாலை ஓரங்களில் உள்ள கடைகளுக்கும் அவற்றை விற்க முடியவில்லை.ஊரடங்குக்கு முன் ஒரு தர்பூசணி காய், 13 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது யாரும் வாங்க முன்வராததால், அவை செடியில் பழுத்து வெடித்து வீணாகி போனது. இதன் மூலம் இப்பகுதியில், 30 ஏக்கருக்கு மேல் பயிரிட்ட தர்பூசணி மூலம், பல லட்சம் ரூபாய் வீணாகி உள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே