பெருந்துறை சூன் 18: சூரியம்பாளையம் பகுதியில் 19ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் தட்டான்குட்டை, நீலிக்காடு, ராயபாளையம்புதூர், அண்ணாமலையார் நகர், கரும்புக்காடு, மாமரத்துப்பாளையம், நரிப்பள்ளம், சேரன் நகர், கணபதி நகர், வசந்தம் நகர், டாக்டர் காலனி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும்.அதுபோல, பெருந்துறை சிப்காட் பகுதியில் 19ம் தேதி பராமரிப்பு பணி நடப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதனால் சிப்காட் தோல் தொழிற்சாலை பகுதி, நாதகவுண்டன்பாளையம், பல்லக்காட்டூர், கம்புளியம்பட்டி, வரப்பாளையம், புளியம்பாளையம், குட்டப்பாளையம், காசிலிங்ககவுண்டன்புதூர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே