ஈரோடு ஜூன் 1: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் சி.ஏ.ஏ., சட்டத்தை ரத்து வலியுறுத்தி ஈரோடு மாவட்ட எஸ்.டி.பி.ஐ., (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் முகம்மது லுக்மானுல் ஹக்கீம் தலைமை தாங்கினார். கொரானா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடைந்த தோல்வியை மறைத்து மக்களின் கவனத்தை திசை திரும்பும் வகையில் சி.ஏ.ஏ., சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனை ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்டங்கள், வேளாண் சட்டங்கள் போன்றவைகளையும் திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தினர்.மாவட்ட பொதுச் செயலாளர் முஹசின் காமினுான், துணை தலைவர் பாஷா, செயலளர்கள் முஹமது அகீல், சுலைமான், பொருளாளர் யூனுஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோன்று, பவானி, ஜம்பை, கோபி, சத்தி, புளியம்பட்டி, சத்தியமங்கலம் போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிருபர்.
ஈரோடு டுடே