ஈரோடு சூன்17: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மைரடா எனப்படும் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் 18 ம் தேதி காலை 11 முதல் 1 மணி வரை இணைய வழி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடக்கிறது.விவசாயிகளுக்காக, சமச்சீர் உரப்பயன்பாடு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. வேளாண்மை விஞ்ஞானி ஏ.பிரேமலதா, முதுநிலை விஞ்ஞானி மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் பி.அழகேசன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் ஆகியோர் விவசாயம் குறித்து விளக்குகின்றனர்.நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வி.ரேவதி, ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் கார்த்திகா, கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் வி.ஜீவதயாளன், விஞ்ஞானி சீனிவாசன் ஆகியோர் தொழில் நுட்பங்கள், விவசாயம் சார்ந்த கருத்துக்களை பேசுகின்றனர்.ஜூம் மீட்டிங் மூலம் ஐ.டி – 6689229190, பார்கோடு – ZHMfYF பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே