ஈரோடு மே 30: ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் மற்றும் சக்திதேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமுதாயப்பணிகளை செய்து வருகின்றனர்.இங்கு பணி செய்யும், 18 முதல், 44 வயதினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. சக்தி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குனர் சாந்தி துரைசாமி மற்றும் ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி தலைமையில், 434 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.மருத்துவ அலுவலர்கள் கோகுலகிருஷ்ணன், பிரியங்கா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் மேற்பார்வையில் தடுப்பூசி போடப்பட்டது.
நிருபர்.
ஈரோடு டுடே