ஈரோடு சூன் 18: டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் தேவையான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த அ.தி.மு.க, ஆட்சியில் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென குரல் கொடுத்தோம். அதற்காக போராட்டத்தை நடத்தியபோது முன்னாள் முதல்வர் பழனிசாமி, இப்பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை. பின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியபோதும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.கொங்கு மண்டலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒதுக்கப்பட்டால் பெருந்துறையில் அமைக்க வேண்டும். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளதால், முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே