ஈரோடு மே 29: ஈரோடு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், கொரோனா கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படும் ‘வார் ரூம்’ கடந்த 17 ம் தேதி முதல் செயல்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அறிகுறிகளுடன் உள்ளோர், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு கண்டு கொள்ள, வார் ரூம் அமைக்கப்பட்டது. இங்கு மூன்று ஷிப்ட்களாக எட்டு மணி நேரத்துக்கு பத்துப்பேர் என, 30 பேர் தொடர்ச்சியாக பணியில் உள்ளனர். அவர்களுடன் ஒரு டாக்டர், இரண்டு மன நல நிபுணர்கள், ஒரு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருப்பார்கள்.இவர்களை, 80569 31110, 82206 71110, 82207 91110, 87542 31110, 87543 81110, 87547 31110, 88703 61110, 88705 41110, 88705 81110, 88706 91110 என்ற பத்து எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவர்களிடம், கொரோனா பரிசோதனை எங்கு செய்யலாம், தனக்கான அறிகுறிக்கு எந்த மருத்துவரை அணுகுவது, எந்த மருத்துவமனையில் தற்போது காலியாக படுக்கைகள் உள்ளது, ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி உள்ளதா, தனியார் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் இடம் உள்ளதா, ஆம்புலன்ஸ் வாகனம் தேவை, தங்கள் பகுதியில் கொரோனா பாதித்தவர்கள் குறித்த புகார்களையும், இதில் தெரிவிக்கலாம். இவ்வாறாக தினமும், 700 போன் அழைப்பு என இதுவரை, 7,000 பேர் போன் மூலம் அழைத்து, தங்களது சந்தேகங்களுக்கு தீர்வு கண்டுள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிருபர்.
ஈரோடு டுடே