ஈரோடு மே 30: பெருந்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை வளாகத்துக்கு மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்தனர்.ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தலைமையிலான அதிகாரிகள், 14 மணி நேரத்தில் சிகிச்சை மையத்துக்கான மின்சார இணைப்பை வழங்கினர். அவர்கை அதிகாரிகள் பாராட்டினர்.இதுபற்றி, மேற்பார்வை பொறியாளர் இந்திராணி கூறியதாவது:-பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்ட படுக்கை வளாகத்துக்கு மின் இணைப்பு வழங்க அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் ச.கதிரவன் ஆகியோர் உத்தரவிட்டனர்.உடன், மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆலோசனைப்படி, இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்த கட்டமைப்பு மின்சார நீட்டிப்பு செய்ய முடியாததால், 250 கிலோ வாட் சக்தி கொண்ட 2 மின் மாற்றிகள், 5 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன. மொத்தம் 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. தற்போதைய சூழலில் கூடுதலாக 500 படுக்கைகள் அமைத்தாலும் மின்சார இணைப்பு உடனடியாக வழங்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுபோல் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு, 24 மணி நேரமும் தடை இல்லாத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இச்செயல்பாட்டை அதிகாரிகள், நோயாளிகள் பாராட்டினர்.இவ்வாறு கூறினார்.
நிருபர்.
ஈரோடு டுடே