ஈரோடு ஜூன் 3: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் கொரானா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளான அசிஸ்த்ரோமைசின், இன்வர்மெக்டின், டாக்சிசைலைன், ஸ்டெராய்ட்ஸ், ஆன்டிவைரல், ஆன்டிபையோடிக்ஸ் உள்ளிட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்படி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இம்மருந்துகளின் கொள்முதல், விற்பனை, இருப்பு மற்றும் மருந்தாளுனர் பதிவேடு ஆகியவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் மருந்துகளை விற்பனை செய்யும்போது நோயாளியின் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், பரிந்துரைத்த டாக்டரின் விவரத்தை தினமும் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலமாக பரிந்துரை செய்திருந்தால் அதற்கான ஆதாரங்களை பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்க வேண்டும். எந்த நிலையிலும் கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940, அதன் அடிப்படை விதிகள் 1945-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த தகவலை ஈரோடு மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் குருபாரதி தெரிவித்து உள்ளார்.
நிருபர்.
ஈரோடு டுடே