ஈரோடு ஜூன் 10: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்தவர் எஸ்.சந்தானபாரதி – சி.சரண்யா தம்பதியரின் மகள் எஸ்.எஸ்.மேகா. இரண்டாம் வகுப்பு படிக்கும் இவருக்கு ஏழு வயதாகிறது.கடந்த 2 ஆண்டாக இவர் சேமித்து வைத்த 5 ஆயிரம் ரூபாய் உண்டியல் பணத்தை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெராவிடம், கொரானா நலத்திட்ட உதவிகள் மேற்கொள்வதற்காக வழங்கினார்.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் மனைவி வரலட்சுமி இளங்கோவன், மொடக்குறிச்சி முன்னாள் வட்டார தலைவர் செந்தில்ராஜா, சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்.
ஈரோடு டுடே