ஈரோடு மாவட்டத்தில் தினமும் 1,700 பேருக்கு மேல் கொரானாவால் பாதிக்கின்றனர். ஒரே வீதி, தெரு, அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் பலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டால் அவ்விடங்களை மட்டும் தனிமைப்படுத்தி, கட்டை கட்டி அடைக்கின்றனர்.அங்குள்ளவர்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் உள்ளே வரவும் தடை விதித்துள்ளனர். அப்பகுதி முழுமையாக கிருமி நாசினி தெளித்து, அங்குள்ளவர்களுக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து, காய்ச்சல், சளி, இருமல் போன்றவை உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.மாவட்ட அளவில் 180 இடங்களில் இதேபோன்று கட்டை கட்டி 8,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் கொரானா பாதித்தோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மற்றவர்கள் என பலரும் உள்ளதால், அப்பகுதிக்கு தள்ளுவண்டியில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்ய, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இங்குள்ளவர்கள் பெயர், போன் எண் பெறப்பட்டு, சுகாதாரத்துறையினர் தினமும் போன் செய்து, ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களின் நிலை குறித்த விபரத்தை சேகரித்து, தேவையானவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே