அந்தியூர் சூன் 14: அந்தியூர் தாலுகா பி.மேட்டுப்பாளையம், சின்னதம்பிபாளையம், பச்சாம்பாளையம் போன்ற கிராமங்களில் கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அங்கு கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:தனிமைப்படுத்தப்பட்ட கொரானா நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது.வரும் 21 ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரானா பரவல் பகுதியில் தடுப்பு நடவடிக்கை, மருத்துவ சிகிச்சை வழங்குவதால் விரைவில் இந்நோய் பரவல் கட்டுக்குள் வரும்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விபரங்கள், ‘வார் ரூம்’க்கு தெரிவிக்கிறோம். எனவே கொரானா சிகிச்சை பெறுவோர், வார் ரூமுக்கு தொடர்பு கொண்டால், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்ற விபரத்தை தெரிவிப்பார்கள்.அனைத்து பகுதியிலும் 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமித்து, தினமும் வீடுகளில் உள்ளோருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, உடனடியாக சிகிச்சை வழங்கினோம். அதன் பலனாக, கொரானா மட்டுமின்றி பிற நோய் பரவலும் கட்டுக்குள் வந்துள்ளது. இதனை தொடருவோம்.இவ்வாறு கூறினார்.அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், ஊராட்சிகள் – உதவி இயக்குனர் உமாசங்கர் ஆகியோர் உடன் வந்தனர்.
நிருபர்.
ஈரோடு டுடே