ஈரோடு சூன் 11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர்.குழந்தை தொழிலாளர்களை பணிக்கு வைத்து கொள்ளக்கூடாது. அவ்வாறு பணியில் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். படிக்கும் வயதுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும். அவர்கள் நிறுவனம் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே