ஈரோடு சூன் 14: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரீடு ரயில்வே குழந்தைகள் உதவி மையம் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது.ரீடுரயில்வே குழந்தைகள் உதவி மையம், சைல்டு லைன், தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பள்ளி, ரயில்வே போலீஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ரயில்வே ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும், அவர்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து ரீடு ரயில்வே குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், டாக்டர் அசோக் ஆகியோர் பேசினர். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த போஸ்டர்கள் வைக்கப்பட்டது.குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அந்நிறுவன உரிமையாளருக்கு அபராதம் மற்றும் சிறை தண்பனையும், அந்நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என எச்சரித்தனர்.

நிருபர்.
ஈரோடு டுடே