ஈரோடு ஜூன் 2: ஈரோடு சங்கு நகரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.சித்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணை தலைவர் அமீர், த.மு.மு.க., மாவட்ட துணை செயலாளர் சாகுல்ஹமீது, இளைஞரணி செயலாளர் சாகுல் அலாவுதீன் ஆகியோர் பேசினர்.தேசிய அளவில் கொரானாவால் மக்கள் சிரமப்படுகின்றனர். இச்சூழலில் கடந்த சில நாட்களாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் 13 மாவட்டங்களில் குடியுரிமை சட்டத்தின் கீழ் கணக்கெடுப்பை மாவட்ட கலெக்டர்கள் நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர், பார்சி வகுப்பை சேர்ந்தவர்கள் குறித்து கணக்குகளை சேகரிக்க மத்திய உள் துறை அமைச்சக அரசாணையில் கூறி உள்ளனர். இந்த அரசாணையை ரத்து செய்து, இதுபோன்ற கணக்கெடுப்பை நிறுத்த வேண்டும், என வலியுறுத்தினர்.இதேபோல, 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நிருபர்.
ஈரோடு டுடே