ஈரோடு மே 29: ஈரோடு மாவட்டத்தில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும், 1,731 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 21 பேர் இறந்துள்ளனர். இதனால், ஊரடங்கை மேலும் கடுமையாக்கி உள்ளனர்.முழு ஊரடங்கு நிலையில், கொரானா பரவலை தடுக்க, பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது. பணி நிமித்தமாக செல்வோர், மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைக்காக மட்டும் சிலர் வாகனங்களில் சென்று வருகின்றனர். அதேநேரம், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகங்களில் அதிகாரிகள் கூட்டம், வாகனங்கள் வந்து செல்லுதல், பன்னீர்செல்வம் பூங்கா ரவுண்டானா, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் வாகன தணிக்கை, பஸ் ஸ்டாண்டில் காய்கறி மொத்த விற்பனை போன்றவை நடக்கிறது. இவ்விடங்களில் மக்கள் வந்து செல்வதால், இவ்விடங்களில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளித்து துாய்மைப்பணி செய்து வருகின்றனர்.மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வழங்கும் பட்டியல்படி, கொரோனா பாதித்தோர், தனிமைப்படுத்தப்பட்டோர் உள்ள வீடுகள், தெருக்களில் கிருமி நாசினி தெளித்து, அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாக அகற்றி வருகின்றனர்.கொரானா பாதித்தோர் உள்ள வீடு, கழிப்பிட பகுதி, அவர்களது வாகனங்களில் கூட கிருமி நாசினி தெளித்து சென்றனர்.