கோபிசெட்டிபாளையம் மே 31: கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குள் வெளியாட்கள் வந்தால், கொரானா பரவும் என்பதால் பிரதான வழிகளில் கட்டை கட்டி, தடுப்பு வைத்து அடைத்துள்ளனர்.கொரானா பராவல் அதிகமாக உள்ளதால், அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் கொரானா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நோய் இல்லாத மக்களுக்கு குடிநீர், உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.பிற பகுதியில் உள்ளவர்கள் தேவையின்றி பிற கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும். வெளியூர்களில் இருந்து யாராவது வந்தால், அவர்கள் பற்றிய விபரத்தை ஊராட்சி அலுவலகம், சுகாதாரத்துறைக்கு தெரிவித்து, அவர்களுக்கு கொரானா பாதிப்பு உள்ளதா என கண்டறிந்து, தேவைப்பட்டால் தனிமைப்படுத்த வேண்டும். அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க செய்ய வேண்டும், என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, பல ஊராட்சிகளில் நிர்வாகம் சார்பிலும், பொதுமக்களும் சேர்ந்து கட்டை கட்டி, தகரம், பெட்டிகள், குப்பை தொட்டி போன்றவைகளை ரோடு, பிரதான வழிகளின் குறுக்கே வைத்து அடைத்துள்ளனர்.ஊருக்குள் வருவோர் விபரத்தை கேட்டு, அனுமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல, அயலுார், கொடிவேரி, கொடிவேரி அருவி பாதை, செம்மாண்டம்பாளையம் என பல பகுதியில் அடைத்து வைத்து தற்காத்து கொண்டுள்ளனர்.

நிருபர்.
ஈரோடு டுடே