ஈரோடு சூன்11: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரம் நடக்கிறது. இங்கு தினமும், 500க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி சென்று, வீதிகளில் விற்பனை செய்கின்றனர்.பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலேயே, ரூ.80, ரூ.100, ரூ.120 க்கு என காய்கறி தொகுப்பாக தக்காளி, வெண்டிக்காய், கேரட், கருவேப்பிலை, மல்லி இலை உட்பட சில காய்கறிகளை பாக்கெட்டில் போட்டு செல்கின்றனர். மற்றவற்றை மொத்தமாக விற்கின்றனர்.இவ்வாறு வியாபாரிகள் கூட்டமாகவே இருப்பதால், இவர்களுக்குள் கொரானா பரவல் அச்சம் உள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சி ஏற்பாட்டின்பேரில் இங்கு மொத்த காய்கறி வியாபாரிகள், சில்லறை விற்பனைக்காக வாங்கி செல்வோருக்கு கொரானா பரிசோதனை நடந்தது.பரிசோதனையின் மூலம் ஆரம்ப நிலையில் கொரானா தொற்றை கண்டறிந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் தடக்க முடியும் என்பதால், முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்யப்பட்டது.நேற்றைய பரிசோதனையில், 520 வியாபாரிகளுக்கு கொரானா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுத்து சென்றனர். இவர்களுக்கு நாளை பரிசோதனை முடிவை அறிவித்து, தேவையானவர்களுக்கு சிகிச்சைக்கான பரிந்துரை வழங்கவும், கொரானா பரிசோதனை செய்யாதவர்களை வேறு இடங்களில் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும், என யோசனை தெரிவிக்கப்பட்டது.

நிருபர்.
ஈரோடு டுடே